“சாப்பாடு கொஞ்சம்; சரக்கு கொஞ்சம்” வாழ்க்கைக்கு இது ரொம்ப முக்கியம்… ஜீவா பேசிய வீடியோ வைரல்…!!

By admin on ஐப்பசி 10, 2024

Spread the love

பிரபல நடிகரான ஜீவா தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்பி சௌத்ரியின் மகன் ஆவார். கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தித்திக்குதே படத்தில் ஹீரோவாக நடித்தார்.

   

கடந்த 2005- ஆம் ஆண்டு ரிலீசான ராம் திரைப்படம் ஜீவாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு டிஸ்யூம், கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். கச்சேரி ஆரம்பம், சிங்கம்புலி, ரௌத்திரம், வந்தான் வென்றான், நீ தானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஜீவா நடித்துள்ளார்.

   

 

இப்போது ஜீவாவுக்கு 40 வயது ஆகிறது. இந்த நிலையில் ஜீவா அளித்த பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு ஐந்து விஷயங்கள் இல்லை என்றால் இருக்கவே முடியாது. வாழ்க்கையில் அந்த ஐந்து இருந்தால் போதும் என நீங்கள் சொல்வது எதெல்லாம் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஜீவா ஸ்டார்ச், டிவி, இன்டர்நெட் கனெக்சன், சாப்பாடு, அதுக்கு அப்புறம் கொஞ்சம் சரக்கு. எல்லாம் வேணும். கொஞ்சம் குடிச்சிட்டு அப்படியே படுத்துட்டா காலையில் தான் எந்திரிப்போம். குழந்தைகள் யாரும் பார்த்தா சேனல் மாத்திக்கோங்க. சாரி என ஜாலியாக பேசி உள்ளார்.