குழந்தை நட்சத்திரமாக பாபநாசம் திரைப்படத்தில் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இவர் மின்னி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள மொழி திரைப்படங்களிலும் எஸ்தர் அனில் நடித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் பாபநாசம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இது திரிஷ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படத்தில் கௌதமி, கலாபவன் மணி ஆகியோர் நடித்துள்ளனர். பாபநாசம் படத்தை ஜோசப் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் எஸ்தர் அனில் கமலுக்கு மகளாக நடித்துள்ளார். இப்போது வளர்ந்து ஹீரோயின் போல மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் எஸ்தர் அனிலுக்கு 13 லட்சம் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.

சமீப காலமாக எஸ்தர் அனில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்த சிறுமியா இது? ஆள் அடையாளமே தெரியாமல் ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
