இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?… அடடே இவரா?…

By Begam on வைகாசி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் ஃபிலிம்ஸ். ஆர். பி. சௌத்ரி அவர்கள் நடத்தி வரும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட ஹிட் படங்கள் வந்துள்ளன. அதில் பல படங்களுக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இத்தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான ஆர் பி சவுத்ரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

   

அவர்கள் இருவருமே தற்பொழுது சினிமாவில் கதாநாயகனாக கலக்கி வருகிறார்கள் . அவர்கள் வேறு யாரும் இல்லை. நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் தான். 2003இல் வெளியான ஆசை ஆசையாய் ஏற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜீவா.

   

 

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராம், கற்றது தமிழ் போன்ற திரைப்படங்கள் இவரை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தது. கடந்தாண்டில் இவர் நடிப்பில் வெளியான காபி வித் காதல் வரலாறு முக்கிய இரண்டு படங்களும் மோசமான விமர்சனங்களையே ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் ஜீவா பா விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். சமீப காலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஜீவாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.