தல அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட ஹீரோயின் இவங்கதானா?… வைரலாகும் சூப்பர் அப்டேட்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து வசூலில் சாதனையும் படைத்து பல்வேறு நாடுகளில் சூப்பர் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்திருந்தார்.

   

வங்கியில் நடக்கும் விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக துணிவு திரைப்படம் அமைந்திருந்தது. இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ,இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித் தனது வேர்ல்ட் டூரின் முதல் கட்டத்தில் நிறைவு செய்ததாக கூறி செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் வேறு யாரும் இல்லை நடிகை திரிஷா தான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை திரிஷா, தற்போது விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்து விடுகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை.