‘கணவர் ஹிந்து… ஆனால் மகன்களுக்கு இஸ்லாமிய பெயரா?’… முகநூல் பக்கத்தில் வம்பிழுத்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த பாத்திமா பாபு….

By Begam

Published on:

பிரபல செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும், பிக் பாஸ் போட்டியாளராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாத்திமா பாபு. இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர். பின்னர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கல்கி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

   

நடிகை பாத்திமா பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆஷிக் மற்றும் ஷாருக் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது சொந்தமாக இவர் youtube சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார் அதில் சமையல் வீடியோக்கள் கதைகள் போன்றவற்றையும் பதிவு செய்து வருகிறார்.

சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டு மகன்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தார் பாத்திமா பாபு. இந்நிலையில் பாத்திமா பாபுவிடம் நெடிசன் ஒருவர் “உங்க ஆத்துக்காரர் இந்துதானே.. உங்க குடும்பத்துல ஒரு இந்து பெயர் கூட இல்லையே பாத்திமா மேடம்.. வெரி பேட் அண்ட் சேட்” என கமெண்ட் செய்திருந்தார்.

தொடர்ந்து அந்த நபர், “நியாயத்தை தானே கேட்டேன்.. இது பொது மேடை.. நான் எவ்விதத்திலும் தவறாக கேட்கவில்லை” என்றார். அதற்கு பாத்திமா பாபு, “நான் ஒரு இந்துவை பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் செய்துகொண்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது. அதனால், பொத்திட்டு போகவும்” என சூடாக பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து அவர் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை பற்றியே கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த அவர் “பொது மேடைல என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ” என பாத்திமா கோபமாக கேட்டிருக்கிறார்.