மீண்டும் மீண்டுமா…. என்னதான் பிரச்சனை உங்களுக்கு ? கமல் படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி, காரணம் இந்த நடிகர் தானா ?

By Deepika on சித்திரை 2, 2024

Spread the love

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் மணிரத்தினம் கமல் படத்தில் பிசியாகி விட்டார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் டேட்ஸ் பிரச்சனை காரணமாக துல்கர் இந்தப்படத்தில் இருந்து வெளியேறினார்.

Jayam ravi walks out from thug life

அவருக்கு பதிலாக இந்தப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமானார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் இவர் நடித்திருந்தால் இந்த வாய்ப்பு அவருக்கு சென்றது. அவரும் சந்தோசமகா ஏற்றுக்கொண்டார். கமல் படம் என்றால் யார் வேண்டாம் என சொல்வர், ஆனால் இப்போது ஜெயம் ரவி அவராகவே இந்தப்படத்தில் இருந்து வெளியேறி உள்ளாராம்.

   
   

Andhanan opens about jayamravi and simbu issue

 

ஆம், இந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என மணிரத்னம் நினைத்துள்ளார், இதுவே ஜெயம்ரவி வெளியேறியதற்கான காரணம் என கூறியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன். ஏற்கனவே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. பொன்னியின் செல்வனில் சிம்பு நடிக்க இருந்தார், ஆனால் ஜெயம் ரவியால் தான் அந்த படத்தில் சிம்புவால் நடிக்க முடியாமல் போனது என்பதை நான் கூறியபோது, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெயம்ரவி எகத்தாளமாக பேசினார்.

Jayam ravi and kamal

அதாவது சிம்பு எனக்கு போன் செய்து மச்சான் அவனுங்க அப்படிதான் பேசுவாங்க நீ அதெல்லாம் கண்டுக்காத என கூறியதாக கூறி பத்திரிகையாளர்களை மரியாதை இல்லாமல் பேசினார் ஜெயம் ரவி. இப்போது அதே சிம்புவினால் தான் இவர் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறுகிறார். அவர்கள் வெளியில் நண்பர்கள் போல் தென்பட்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு பகை உள்ளது என கூறியுள்ளார் அந்தணன்.