நடிகை லட்சுமியுடன் நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்… அதற்க்கு புரட்சி தலைவர் சொன்ன காரணம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அதுபோல தன்னுடைய படங்களில் யார் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார். தன்னுடைய ஆரம்பகால கட்ட படங்களில் சரோஜா தேவியோடு தொடர்ந்து நடித்தார். அதன் பின்னர் அவரின் ஜெயலலிதா ஜோடி வெற்றிகரமானதாகக் கருதப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளனர்.

   

1970 களுக்குப் பிறகு எம் ஜி ஆர் தன்னுடைய படங்களில் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோரை அடுத்தடுத்துப் பயன்படுத்தினார். ஆனால் அப்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த லெட்சுமியை தன் படங்களில அவர் அதிகமாக நடிக்க வைக்கவில்லை.

அப்படி நடித்த சில படங்களிலும் கூட லெட்சுமியை இரண்டாவது கதாநாயகியாகவோ, அல்லது தங்கை போன்ற வேடங்களிலோதான் பயன்படுத்தியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள சினிமா ஆய்வாளர் மருத்துவர் காந்தராஜ் “லெட்சுமி மிகச்சிறந்த நடிகை. அவர் நடித்த அவன் அவள் அது மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதனால்தான் அவரோடு நடித்தார் தன்னை தூக்கி சாப்பிட்டுவிடுவார் என எம் ஜி ஆர் அவர் படங்களில் போடவில்லை. சும்மா கிளாமராக நடிக்கும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோரைப் பயன்படுத்தினார்” எனக் கூறியுள்ளார்.

எம் ஜி ஆர் படங்களில் கதாநாயகிகளுக்கு பெரிதாக எந்த வேலையும் இருக்காது. பாடல்களில் வந்து கவர்ச்சி நடனமாடுவதும், காதல் காட்சிகளில் நடிப்பது மட்டுமே வேலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.