“என் தோற்றத்தால் நடிக்க மறுத்த நடிகைகள்” ஆனால் இவர் மட்டும் – மேடையில் உருகிய நடிகர் இந்திரன்ஸ்..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மலையாள முன்னணி நடிகர் இந்திரன்ஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் தனது தோற்றத்தின் காரணமாக பல நடிகைகள் தன்னுடன் இணைந்து நடிக்க மறுத்த கசப்பான மற்றும் வேதனையான அனுபவங்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தனது தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் கதையை மட்டுமே முழுமையாக நம்பி தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மதுபாலாவுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியையும் இந்திரன்ஸ் இவ்விழாவில் தெரிவித்தார்.