திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய் தற்போது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்ட போதிலும், இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அத்தொகுதியில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
விஜய் மீதான தனது குற்றச்சாட்டுகளாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் விதிமுறைகளை மீறி குழந்தைகளைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதை இனிகோ இருதயராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வருமான வரி வழக்கு குறித்த விவரங்களை மறைத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்துள்ளார் என்றும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
