இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிரூபிக்க போராடி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது கௌதம் கார்த்திக் சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலித்து வந்தார். இதனை அதிகாரபூர்வமாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை நவம்பர் 28 ல் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு இனிமையான தருணங்களையும் இணையத்தில் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை மஞ்சிமா உடல் எடையை குறைத்த ஸ்லிம் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் தற்பொழுது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது கணவரான கவுதம் கார்த்திக் தனக்கு உதவி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்ட் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…