தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் இறுதி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பிரம்மாண்டமான பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்புக்காக பாடல் காட்சியின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்ட நடத்தப்பட்டது.
அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் காம்பினேஷன் காட்சிகளை எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டு இருந்தார். தளபதியின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது. நடிகர் விஜயின் தளபதி 69 திரைப்படம் கடந்த மாத ஐந்தாம் தேதி பூஜை உடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது.
அதற்கு அடுத்த நாடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தளபதி 69 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் தளபதி 69 படத்தில் மமிதா பைஜுக்கு ஜோடியாக டிஜே அருணாச்சலம் நடிக்கிறாராம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தளபதி 69 படத்தில் நான் மமீதா பைஜுக்கு ஜோடியாக நடிக்கிறேன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி விஜய் சாரோட கடைசி படம் என்பதால் இந்த படத்தின் வாய்ப்பை மறக்க முடியவில்லை அவரோட நடிப்பது என்பது என்னுடைய கனவு அவர் மீது மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்