நீங்க நல்லா மியூசிக் பண்றீங்க… ஆனா இதை பண்ணுனா நல்லா இருக்கும்… Rock Star-க்கு AR ரஹ்மான் போட்ட கண்டிஷன்..!

By Soundarya on தை 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவர்தான் இசையமைப்பாளர் அனிருத். சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன் மற்றும் ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகின்றார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் படங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

   

அனிருத் 2011 ஆம் ஆண்டு வெளியான வை திஸ் கொலவெறி பாடல் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு 2014 ஆம் ஆண்டு விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார். அனிருத் இதுவரை இரண்டு பிலிம் பேர் விருதுகள், 9 சைமா விருதுகள் மற்றும் ஆறு எடிசன் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். அதே சமயம் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

   

 

ஆனால் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு எட்டு கோடி சம்பளம் வாங்குகிறார். அனிருத் தற்போது பிஸியான ஒரு இசையமைப்பாளராக வலம் வருகிறார். அடுத்தடுத்து பெரிய படங்களில் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் காதலிக்க நேரமில்லை பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசைப்புயல் AR ரகுமான் அனிருத்துக்கு வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.

அதாவது, “அனிருத் நன்றாக இசையமைக்கிறார். உங்களுக்கு எனது சிறிய வேண்டுகோள் என்னவென்றால், நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு ஒரு கிளாசிக்கல் Version பாடல் வேண்டும் என்பதுதான். ஏனெனில் நீங்கள் அதை செய்யும் போது அது இளைய தலைமுறையை சென்றடையும்” என்று கூறியுள்ளார்.