தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தனுஷின் 51ஆவது திரைப்படம் ஆகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் நேற்று குபேரா படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இந்தியில் நடிகர் தனுஷை ஒரு சில வார்த்தைகளை பேசுமாறு அழைத்தார். அப்போது பேச தொடங்கிய தனுஷ், ஓம் நமச்சிவாயா.. எல்லோருக்கும் வணக்கம், ரொம்ப சந்தோசம் உங்கள் அனைவரையும் பார்த்ததில். எனக்காக இங்க வந்து இருக்கீங்க. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அதுவும் கொஞ்சம் தான் தெரியும் என்றதும் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பட அனுபவம் குறித்தும் நடிகர் தனுஷ் பேசிய நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hindi theriyadhu poda 💀#Dhanush #Kubera pic.twitter.com/Gn9U0BcvZt
— Deepu (@deepu_drops) June 10, 2025
