இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்.. ரெடியா இருங்க மக்களே..!

By Nanthini on ஆனி 11, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.

 

   

இப்படியான நிலையில் தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் வீட்டில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இருந்தாலும் குடும்ப தலைவி மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தால் அரசு வேலை அல்லது வேறு ஏதும் உதவித்தொகை பெறாமல் இருந்தால் அவர்களும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக விண்ணப்பதிவு அடுத்த வாரம் முகாம்கள் நடத்தப்பட்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.