‘அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்’ பாடல் மூலம் பிரபலமான நடிகர் தீபன் இப்ப எப்படி இருக்காரு தெரியுமா..?

By Begam

Published on:

1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்  திரைப்படம் ‘முதல் மரியாதை’ . இத்திரைப்படத்தில் நடித்தவர்களை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு தங்களது கைதேர்ந்த நடிப்பினால் தற்பொழுது வரை மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளனர்.

   

இந்த படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ், வடிவுகரசி, தீபன், ரஞ்சினி, ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.  இளையராஜாவின் இசையும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்’ இந்த பாடல் இன்றுவரை பலரின் பாவரைட் லிஸ்டில் இருக்கும். இதில் வரும் நடிகர் தீபன் இப்ப எப்படி இருக்காரு தெரியுமா..?  36  வருடங்களுக்கும் மேலாக திரையுலகை விட்டு விலகியிருந்த நடிகர்  தீபன் ‘கேர் ஆப் காதல் ‘ என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது அவரை வாழ்த்தி நடிகர் கயல் தேவராஜ் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அந்த பதிவு…