தளபதி விஜயுடன் இருக்கும் இந்த சினிமா பிரபலம் யார் தெரியுதா…? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

By Begam

Published on:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது GOAT திரைப்படத்தை  எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தளபதி விஜயைக் கொண்டு திரையுலகில் கால் பதித்தவர் தான் நடிகர் விக்ராந்த்.

   

இவர் தமிழ் சினிமாவில் கசட தபர என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். ஒரு சில படங்கள் மட்டுமே இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பக்ரீத் திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை. முத்துக்கு முத்தாக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இவருக்கென்று ஒரு தனி தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிக்கும் எந்த  கதாபத்திரமாக இருந்தாலும் அதை மக்கள் மனதில்  ஆழ பதிய செய்வார். தற்பொழுது வரை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள தற்பொழுது வரை திரையுலகில் போராடி வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் நடித்து, சூப்பர் ஸ்டார் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘லால் ஸலாம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது நடிகர் விஜயுடன் நடிகர் விக்ராந்த் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…