டீ குடிச்சிட்டு வரேன்னு எஸ்கேப் ஆன சரத்குமார்.. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சம்பவம் செய்த ஆக்சன் கிங் அர்ஜுன்..

By Ranjith Kumar

Published on:

கண் சிமிட்டும் நேரத்திலே என்ற படம் மூலமாக தமிழ் திரையுலைகளுக்கு அறிமுகமான சரத்குமார் அவர்கள் அதன் பின் சமஸ்தானம், ராஜபாண்டி, நம்ம அண்ணாச்சி, கூலி, மானஸ்தன், சூரிய வம்சம், போன்ற படங்களில் நடித்த வெறித்தனமான வெற்றியை குவித்து அள்ளி தனக்கென்று ஒரு மாபெரும் கோட்டை கட்டி அதன் உச்சியில் நின்று கொண்டிருந்தார் சரத்குமார். அந்த சமயத்தில் அவருக்கு அமைந்த அனைத்து கதையிலும் வெற்றி படமாகவே மாறியது அசைக்கும் முடியாத ஒரு ஆளுமையாக நின்று கொண்டிருந்தார்.

   

அவர் மிகப்பெரிய ஸ்டாராக இருந்த சமயத்தில் பாய்ஸ், ஜென்டில்மேன் காதலன் என்ற மாபெரும் படைப்பை கொடுத்து திரையுலைகள் அறிமுகமாகிய சங்கர் அவர்கள் தற்போது வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் அவர்களை சந்தித்து முதல்வன் படத்தின் கதையை கூறினார் அந்த கதையை அவர் கேட்டுக்கொண்டு பாதிலேயே டீ குடிச்சிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி ஓடியவர் தான் பின்னர் வரவே இல்லையாம், இப்படிப்பட்ட கதையை அவர் எப்படி தான் கை நழுவ விட்டாரோ,

அதன் பின் இக்கதையை விஜய் அவர்களிடம் சென்று சொல்லியபோது அவர் நான் இப்போதுதான் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் என்னால் அரசியல் சம்பந்தப்பட்ட படம் பண்ண முடியாது என்று மறுத்துவிட்டாராம். அடுத்தபடியாக இந்த கதையை கமல்ஹாசன் அவர்களிடம் கொண்டு சென்றிருக்கிறார், அவரும் இந்த கதையை கேட்டுவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் இது எனக்கு சரி வருமா என்று தெரியவில்லை என்று கதையை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். கமல்ஹாசன் திரையுலகின் அனுபவம் கலை வைத்து எப்படித்தான் நீ கதையை சுலபமாக எடை போட்டார் என்று தெரியவில்லை இப்படிப்பட்ட படத்தை கைநழுவ விட்டாராம் கமலஹாசன்.

அதன் பின் சங்கர் அவர்கள் எவ்வளவோ நடிகர்களிடம் சென்றிருக்கிறார். எதுவும் சரிவராத முதலால் நம்மல் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்த ஆக்சன் கிங் அர்ஜுனனை வைத்து படத்தை பண்ணலாம் என்று அவரிடம் கேட்டுள்ளார் அர்ஜுன் அவரும் உடனே சரி என்று சொல்லி படத்தை துவங்கி படம் வெளியான பிறகு பட்டி தொட்டி எல்லாம் வெறித்தனமாக ஓடியது. இப்படம் அர்ஜுன் அவர்களுக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாயிண்டாகவே அமைந்தது என்று சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு மாஸ்டர் ஹிட் படத்தை இவ்வளவு ஹீரோ எப்படி தான் கைநழுவ விட்டார்களோ என்று தெரியவில்லை, என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar