தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் சித்ரா லட்சுமணன். இவரை ஒரு நடிகராக நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் 1980 மற்றும் 90 காலகட்டங்களில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர். லட்சுமணன் ஆரணியில் உள்ள ஹார்டுவேர் கடையில் வேலை செய்யத் தொடங்கினார் . பின்னர் விதி வெள்ளி இதழின் துணை ஆசிரியராக அது மூடப்படும் வரை சேர்ந்தார். பின்னர் ஜெயகாந்தன் நடத்திய தாயின் மணிக்கொடியில் சேர்ந்தார் . பின்னர் சிங்கப்பூர் தமிழ் இதழில் சேர்ந்தார் . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சென்னைக்கு வந்தவர் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து வாழ்க்கை, புதிய தீர்ப்பு, ஜல்லிக்கட்டு, சின்னப்பதாஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் ஒரு இயக்குனராக சூரசம்ஹாரம், பெரிய தம்பி, சின்ன ராஜா போன்ற திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். ஒரு நடிகராக புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் திரைப்படம் வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த புகழ் பெற்றவர்.
தற்போது 76 வயதாகும் சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் தமிழ் டாக்கீஸ் தமிழ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் பழம்பெரும் நடிகர்கள் குறித்த பலரும் அறிந்திடாத தகவல்களை அடிக்கடி வீடியோவாக வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய நல்ல செய்திகளையும் கொடுத்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும் காயத்ரி மற்றும் கிருத்திகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக்…
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…