தமிழ் சினிமாவில் நடிகராக கவனம் ஈர்த்த சித்ரா லட்சுமணன்.. இதுவரை பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!

By Nanthini on தை 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் சித்ரா லட்சுமணன். இவரை ஒரு நடிகராக நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் 1980 மற்றும் 90 காலகட்டங்களில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர். லட்சுமணன் ஆரணியில் உள்ள ஹார்டுவேர் கடையில் வேலை செய்யத் தொடங்கினார் . பின்னர் விதி வெள்ளி இதழின் துணை ஆசிரியராக அது மூடப்படும் வரை சேர்ந்தார். பின்னர் ஜெயகாந்தன் நடத்திய தாயின் மணிக்கொடியில் சேர்ந்தார் . பின்னர் சிங்கப்பூர் தமிழ் இதழில் சேர்ந்தார் . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சென்னைக்கு வந்தவர் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

is actor pandiyan was a rejected hero | ஏகப்பட்ட மனவருத்தம்...  பாண்டியனுக்காக சித்ரா லட்சுமணனிடம் கோபப்பட்ட பாரதிராஜா!

   

 

   

அதனைத் தொடர்ந்து வாழ்க்கை, புதிய தீர்ப்பு, ஜல்லிக்கட்டு, சின்னப்பதாஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் ஒரு இயக்குனராக சூரசம்ஹாரம், பெரிய தம்பி, சின்ன ராஜா போன்ற திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். ஒரு நடிகராக புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் திரைப்படம் வரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த புகழ் பெற்றவர்.

 

Chitra Lakshmanan Amazing Comedian | சித்ரா லட்சுமணனை வியக்க வைத்த  நகைச்சுவை நடிகர்

தற்போது 76 வயதாகும் சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் தமிழ் டாக்கீஸ் தமிழ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் பழம்பெரும் நடிகர்கள் குறித்த பலரும் அறிந்திடாத தகவல்களை அடிக்கடி வீடியோவாக வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய நல்ல செய்திகளையும் கொடுத்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும் காயத்ரி மற்றும் கிருத்திகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.