Categories: சினிமா

அமெரிக்காவில் இருந்து குரங்கை வரவழைத்து அதுக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டுத் தங்கவைத்த தயாரிப்பாளர்… வசூலில் கலக்கிய திரைப்படம்!

Spread the love

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1940 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகள் நடத்தி 1943 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

அதே போல அவர் தயாரிப்பில் உருவான ஔவையார் திரைப்படம் 6 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. பல முறை எடுக்கப்பட்டு இருந்த 6 மணிநேரத்துக்கும் மேற்பட்ட காட்சிகளை சுருக்கி படமாக எடுத்து 1953 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார். அந்த படமும் சூப்பர்ஹிட் ஆனது.

தென்னிந்தியாவில் மட்டும் படங்கள் எடுத்ததும் அல்லாமல் இந்தி சினிமாவுக்கும் சென்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார் வாசன். அப்படி அவர் எடுத்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் இன்சானியாத். இந்தி சூப்பர் ஸ்டார் திலீப்குமார் அந்த படத்தில் நடித்தார். அவரோடு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிபி என்ற மனிதக்குரங்கு ஒன்றும் நடித்தது.

அந்த குரங்கை வரவழைக்க இரு நாட்டு அரசுகளிடமும் அனுமதி பெற்று அழைத்து வந்து அதற்காக சிறப்பு உணவுகளை எல்லாம் ஏற்பாடு செய்துகொடுத்து பைவ் ஸ்டார் ஓட்டலில் அதைத் தங்கவும் வைத்தாராம் வாசன். அப்படி அந்த குரங்கு 10 நாட்கள் அந்த படத்தில் நடித்ததாம். அந்த படத்தின் வெற்றிக்கு அந்த குரங்கும் ஒரு காரணமாக அமைந்ததாம்.

vinoth

Recent Posts

“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…

3 minutes ago

“எனக்கு மன அமைதியைத் தந்தது அதுதான்…” பிரிவின் வலியை கடக்க உதவிய பகவத் கீதை… உருக்கமாகப் பேசிய ‘நாகினி’ மௌனி ராய்…!!

நாகினி' சீரியல் மற்றும் 'கே.ஜி.எஃப்', 'விஸ்வாம்பரா' போன்ற படங்கள் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மௌனி ராய், கடந்த 2022-ஆம்…

8 minutes ago

“ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு ‘ரெட் கார்டு’…. அடுத்தடுத்து தூக்கப்பட்ட திட்டங்கள்… தவெக அரசின் மாஸ்டர் பிளான் இதோ….!

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து…

10 minutes ago

ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவால் அதிரும் திமுக…. 76 பிரதிநிதிகள் யார் யார் தெரியுமா?…. அதிர்ச்சியில் உறைந்த நிர்வாகிகள்….!

திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புப் பிரதிநிதிகள் இன்று முதல் தங்களது களப்பணிகளைத் தொடங்குகின்றனர். கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்…

26 minutes ago

“கையில் வீச்சு கத்தியுடன் மாஸ் போஸ்…” சித்தா பட இயக்குநருடன் கைகோர்க்கும் உலக நாயகன்… அடுத்த மெகா ஹிட்டுக்குத் தயாராகும் கமல்ஹாசன்…!!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான 'இந்தியன் 2' மற்றும் 'தக் லைஃப்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல்…

29 minutes ago

2029 பிரதமர் ரேஸில் தமிழக முதல்வர் விஜய்?…. டெல்லியை நோக்கி நகரும் தவெக-வின் மாஸ்டர் பிளான்…. பின்னணியில் இயங்கும் மெகா டிஜிட்டல் நெட்வொர்க்….!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி…

31 minutes ago