சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவரது மகன் சஞ்சய் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை டியூஷன் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுவன் சஞ்சய் சாலையோரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், சிறுவனை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், செஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மாயமான சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடமாட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துவதோடு, இதுபோன்ற குற்றங்களைத் தடுத்திடக் காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பையும் தேடுதல் வேட்டையையும் துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், வீடுகளுக்குச் சென்று வாழ்த்து கூறி பணம் வசூலிக்கும் எல்லைப் பகுதியைப் பிரிப்பதில் திருநங்கைகளின் இரு…
லூதியானாவின் ஜாசியன் கிரீன் என்கிளேவ் பகுதியில், ரிதிஷ் சர்மா என்பவர் தனது மனைவி ட்விங்கிளை வீதியின் நடுவில் கூந்தலைப் பிடித்து…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண் அர்ச்சனா,…
பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் திரிவேணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சசிதா தேவி என்ற பெண், நவராத்திரி வழிபாட்டின் போது பாடி…
வயநாட்டில் வனவிலங்கு தாக்குதலால் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…