இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாக்யராஜ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளார். கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்களில் பாக்யராஜ் நடித்தார். அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர்.
பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தனு நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தியை சாந்தனு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜுக்கு சரண்யா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் பாக்கியராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், பாரதிராஜாவின் கைதியின் டைரி திரைப்படத்தில் மீண்டும் அவருடன் நான் இணைந்தேன். அப்போது எனக்கு அவருடன் எந்த பாகுபாடும் கிடையாது. ஏனென்றால் எப்போதுமே பாரதிராஜா சார் என்னோட குரு தான்.
நான் அவருக்கு அசிஸ்டன்ட் தான். அவர் கிட்ட மீண்டும் நான் வேலை பார்க்கிறது பெருமையா தான் நினைக்கிறேன். நானெல்லாம் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கூட சேர்ந்து படம் பண்ணுவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் நடந்ததை உண்மையிலேயே கனவாக தான் இருக்கிறது. எம்ஜிஆரை முதன்முதலாக கோவையில் ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த போது தான் சந்தித்தேன். ஒரு 25 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்தபோது வண்டியிலிருந்து பளிச்சின்னு ஒரு வெளிச்சம் வந்தது. யாருன்னு பார்த்தா அதுதான் எம்ஜிஆர். நாம் தான் எம்ஜிஆர் பாத்துட்டு இருக்குமா என்று நினைப்பதற்குள்ளையே நிறைய கூட்டம் வந்து சுமார் 2500 அடி தூரத்திற்கு என்னை தள்ளி விட்டுட்டாங்க. அதன்பிறகு ஒரு நாள் மற்றொரு கூட்டத்தில் எம்ஜிஆரை சந்தித்தபோது வாத்தியாரே வாத்தியாரே என்று கத்தினேன்.
சட்டென திரும்பி பார்த்த அவர் என்ன என்று என்கிட்ட கேட்டாரு. சும்மா உங்கள பாக்க தான் கூப்பிட்டேன் என்று சொன்னதும் நல்லா பாரு பாத்திட்டியா நான் கிளம்பட்டுமா என்று கேட்டார். சரி என்று சொன்னேன். அதன் பிறகு நான் அவருடன் இணைந்து படம் பண்ணும் போது நிறைய மேடைகளில் அவர் கூறியிருக்கிறார், பாக்கியராஜை இப்போ இல்ல எனக்கு முன்னாடியே தெரியும். அவன் எனக்காக கோவையில் ரசிகர் மன்றம் வைத்திருந்த விஷயம் எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு. ஏனென்றால் என் படங்களில் எம்ஜிஆரை காட்டுவதால் அவர் என்னைப் பற்றி விசாரித்துள்ளார். அதன் மூலமாகத்தான் அவருக்கு என்னை குறித்த தகவல்கள் எல்லாம் கிடைத்துள்ளது.
அதனைப் போல தான் சிவாஜியையும் ஒரு கூட்டத்தில் தான் நான் சந்தித்தேன். இவர்களுடன் எல்லாம் இணைந்து படம் பண்ணியதை என்னால் என்றுமே மறக்க முடியாது. தொடர்ந்து பேசிய பாக்கியராஜ் வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படம் எப்படி சொதப்பியது என்று இன்றுவரை எனக்கு தெரியவே இல்லை. வேட்டியை மடிச்சு கட்டு திரைப்படத்தின் கதையை கேட்டு அமீர்கான் மற்றும் போனி கபூர் அனைவருமே நாங்க பண்றோம் என்று சொன்னாங்க. ஆனால் வேறு ஒருத்தருக்கு உறுதி கொடுக்கத்தை என்று சொன்னதும் அவங்களால அதை பண்ண முடியல. மேலும் சில நடிகர்களும் அதை ரொம்ப லைக் பண்ணாங்க. ஆனா எப்படி படம் சொதப்பியது என்று இன்றுவரை காரணம் தெரியவில்லை என பாக்கியராஜ் பேசியுள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…