Categories: சினிமா

இரண்டாம் திருமணம் குறித்து காட்டு தீயாய் பரவும் வதந்தி… மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி யார் தெரியுமா…?

Spread the love

புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். முதல்வர் முதல் பிரதமர் வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்து பாராட்டுக்களை பெற்றவர். பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் இல்ல திருவிழாவில் கூட சமீபத்தில் கேட்டரிங் சர்வீஸ் செய்து இவர் அசத்தி இருந்தார். இதனைத் தவிர இவருக்கு சொந்தமாக அமெரிக்காவில் ஹோட்டலும் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை வழங்கி வருகின்றார். சமையல் கலையில் மட்டுமல்ல இவருக்கு சினிமா மீதும் அதிக ஆர்வம் உள்ளது. சினிமா மீது கொண்ட ஆசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படம் மூலம் நடிகராகவும் இவர் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் சமீபத்தில் இவர் நடுவராக பங்கேற்று இருந்தார். இப்படி பல புகழுக்குரிய இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. பொதுவாகவே சினிமாவிற்கு வந்து பிரபலமாகி விட்டால் அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது வழக்கம்தான். அதன்படி மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இவரும் அவருடைய ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் கிரிசல்டாவும் காதலித்து வருவதாக கூறி நெட்டிசன்கள் சில இன்ஸ்டா பதிவுகளை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஷ் ஆக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஹார்டின் எமோஜிகளோடு அவர் பதிவிட்டது மட்டுமல்லாமல் அண்மையில் காதலர் தினத்தை அவருடன் தான் கொண்டாடியதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

அதேசமயம் மாதம்பட்டி ரங்கராஜின் இனிப்பகத்தில் இருந்து பிரபலங்கள் சிலருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை அனுப்பி விட்டுள்ள ஜாய் அதில் தன்னுடைய பெயரை ஜாய் ரங்கராஜ் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாக குறிப்பிட்டு ஸ்டோரியும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகளை கண்டு குழம்பிப் போய் உள்ள நெட்டிசன்கள் இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “நான் தான் மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி”என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago