தமிழ் சினிமாவில் வடிவேலு குழுவின் காமெடி நடிகர்களில் நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்தவர் பாவா லட்சுமணன். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் வடிவேலுவோடு இணைந்து நடித்த பின்னர் இவருக்கு பெரிய அங்கிகாரம் கிடைத்தது.
அதன்பின்னர் அவர் விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்ததில் மாயி, ஆனந்தம், அயன் மற்றும் கலகலப்பு ஆகிய படங்கள் அவருக்கு பிரபல்யத்தைப் பெற்றுத்தந்தன. பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் அறியப்படுபவர் இல்லை. அவர் ஒரு புரொடக்ஷன் மேனேஜராக பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.

#image_title
குறிப்பாக இயக்குனர் விக்ரமனின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புரொடக்ஷன் மேனேஜரானார். அப்படி அவர் ஆனந்தம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போதுதான் அந்த படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகர் ஆனார். அதன் பின்னர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பின்னர் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளன.
இந்நிலையில் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை இப்போது அவர் பகிர்ந்து வருகிறார். அதில் இயக்குனர் ஷங்கர் படங்களில் நடித்ததைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் முதலில் ஷங்கர் சாரின் பாய்ஸ் படத்தில் ஒயின்ஷாப் உரிமையாளராக நடித்தேன். அப்போது எனக்குத் தாடி மீசையை எடுத்துவிட்டு நடிக்க சொன்னார். நான் நடித்து முடித்ததும் பாராட்டினார்.
அதன் பின்னர் சிவாஜியில் நாட்டாமையாக நடித்தேன். அந்த காட்சியில் ரஜினி அடித்ததும் பறந்துவரும் பலரில் ஒருவனாக நானும் நடித்தேன். அந்த காட்சியைப் படமாக்கும் போது டூப் போடாமல் நானே நடித்தேன். அதைப் பார்த்து ஷங்கர் சார் ஒரு பெரிய அமவுண்ட் கொடுத்தார். தயாரிப்பாளரிடம் சொல்லி அவரும் பெரிய அமவுண்ட் கொடுத்தார். ஒரே காட்சியில் மட்டும் நடித்ததற்கு எனக்கு அந்த படத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது” எனப் பகிர்ந்துள்ளார்.
