நம் வாழ்வில் என்னதான் நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் நம்மை மீறி சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சாலையில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது கூட எதிரே வருபவர் தவறால் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நேரிடும். இதெல்லாம் விதி விளையாட்டு தான். சமூக வலைத்தளங்களில் கூட நாம் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்களை பார்க்கிறோம். அதில் நொடி பொழுதில் உயிர் தப்பிய வீடியோக்களும் உள்ளன அதே சமயம் நொடி பொழுதில் உயிர் போன வீடியோக்களும் உள்ளன. எந்த நேரத்தில் எது நடக்கும் என்பதை யாராலும் அவதானிக்க முடியாது.
அதுபோல தான் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் வீட்டிற்கு வெளியே நடந்து செல்கிறார். அப்போது அவர் வீட்டில் இருந்து சில அடிகள் வைத்து நகர்ந்ததும் மேலிருந்து ஒரு பெரிய வாட்டர் டேங்க் கீழே விழுகிறது. அந்த டேங்க் உள்ளே சென்ற பெண்ணை அருகில் இருந்த நபர் பதறி கொண்டு சென்று காப்பாற்றுகிறார். நொடி பொழுதில் அந்தப் பெண் உயிர் தப்பினார். பிறகு அக்கம் பக்கத்தில் இருந்து அனைவரும் ஓடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
An apple a day keeps the doctor away. pic.twitter.com/ugvzXYKDxq
— Hemant Batra (@hemantbatra0) October 13, 2024