அஜித்துக்கு டான்ஸ் வராது… ஆனா பாட்டுல இந்த விஷயத்துல அஜித்தான் கிங்கு… பாடகர் ஹரிஹரனே பாராட்டி இருக்காரா?

By vinoth on ஐப்பசி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

   

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

   

#image_title

 

இப்போது அஜித் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதாநாயகனாக மாறிவிட்டார். அவரின் படங்களில் இடம்பெறும் பாடல்களில் அஜித் சரியாக நடனமாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது அதிகமாக வைக்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் பற்றி நடன இயக்குனர் பிருந்தா பகிர்ந்துள்ள கருத்து ஒன்று இப்போது கவனம் பெற்றுள்ளது. அதில் “அஜித்தின் ஆரம்ப காலங்களில் பல படங்களுக்கு அவருக்கு நான் நடனம் வடிவமைத்துள்ளேன். அவரோடு பாடல் எடுப்பது சுவாரஸ்யமான அனுபவம். அவரின் சிறப்பே பாடகர் அந்த பாடலை என்ன நினைத்து பாடியிருப்பாரோ அதை திரையில் கொண்டுவருவார். இதைப் பற்றி பாடகர் ஹரிஹரனே என்னிடம் பேசியுள்ளார். நான் பாடிய பாடலை அவரே பாடியது போல உண்மையாக நடித்துள்ளார் என்று” எனக் கூறியுள்ளார்.