அப்பா அம்மா கூட அவ்ளோ பணம் நம்பிக் கொடுக்க மாட்டாங்க… ஆனா அவர் கொடுத்தார் – எமோஷனலாக பேசிய நடிகர் பாவா லட்சுமணன்!

By vinoth on செப்டம்பர் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வடிவேலு குழுவின் காமெடி நடிகர்களில் நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்தவர் பாவா லட்சுமணன். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் வடிவேலுவோடு இணைந்து நடித்த பின்னர் இவருக்கு பெரிய அங்கிகாரம் கிடைத்தது.

அதன்பின்னர் அவர் விவேக், சந்தானம் மற்றும் யோகி பாபு ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்ததில் மாயி, ஆனந்தம், அயன் மற்றும் கலகலப்பு ஆகிய படங்கள் அவருக்கு பிரபல்யத்தைப் பெற்றுத்தந்தன. பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் அறியப்படுபவர் இல்லை. அவர் ஒரு புரொடக்‌ஷன் மேனேஜராக பல ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.

   

Bava lakshmanan

   

குறிப்பாக இயக்குனர் விக்ரமனின் படங்களில் தொடர்ந்து பணியாற்றிய அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புரொடக்‌ஷன் மேனேஜரானார். அப்படி அவர் ஆனந்தம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போதுதான் அந்த படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகர் ஆனார். அதன் பின்னர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த பின்னர் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளன.

 

இந்நிலையில் தான் புரொடக்‌ஷன் மேனேஜர் வேலை செய்த போது கிடைத்த  அனுபவங்களை சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார். அதில் “நான் சூர்யவம்சம் படம் முடித்ததும் அந்தபடத்தின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி சார், என்னை அவர் கம்பெனிக்கே மேனேஜராக இருக்க சொல்லிவிட்டார். ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கின் போதும் அவர் என் கையில் 5 லட்சம் ரூபாய் கேஷ் கொடுத்துவிடுவார்.

R B Choudary

நான்தான் ஷூட்டிங்குக்குத் தேவையான செலவை எல்லாம் செய்வேன். கணக்கே கேட்கமாட்டார். தினசரி செலவுகளை பதிவு செய்து நான் அவருக்கு இன்வாய்ஸ் அனுப்பிவிடுவேன். அதை பார்த்துவிட்டு எவ்வளவு பணம் தேவையோ அதை எனக்கு அனுப்பிவைப்பார். அப்பா அம்மா கூட நம்மிடம் 5 லட்சம் பணம் கையில் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர் என்னை நம்பி கொடுப்பார்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.