எந்த பிணையமும் இல்லாமல், தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் மத்திய அரசு… விவரம் இதோ..!!

By Nanthini on புரட்டாதி 27, 2024

Spread the love
இந்தியாவில் மக்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரதம மந்திரி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தில் சிறு தொழில் முனைவோர்களுக்கு உதவும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. சிறு குறு தொழில்களுக்கு பிணையில்லாமல் கடன் உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை மற்றும் விலை புள்ளி உள்ளீட்டு அனைத்து விபரங்களையும் சமர்ப்பித்து எந்த ஒரு பிணையும் இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேரை கடன் பெற முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் வருமானம் ஈட்டும் வணிகங்கள் தர முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். சொந்தமாக தொழில் தொடங்க விருப்பம் உள்ள இளைஞர்கள் அல்லது தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த விரும்பும் சிறு தொழில் முனைவோர் ஆகியோர் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பல சாதகங்கள் உள்ளது. அதில் முக்கியமானது பொதுவாகவே கடன் பெறுவதற்கு பொருளையோ அல்லது பத்திரத்தையோ கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த திட்டத்திற்கு எந்த விதமான ஆதாரமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. சரியான ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். முத்ரா திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு இந்த தொகை ரூ. 20 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முத்ரா கார்டுகள் மூலமாகவும் ஆன்லைனிலும் முத்ரா செயலி மூலமாகவும் கடன்களை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் கடனை பெற தொழில் முனைவோர் 18 அல்லது அதற்கு மேற்பட்ட, 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.