சித்தர் வழிபாடு செய்வது எப்படி…? அவர்கள் ஆசி கிடைக்க இப்படி செய்யுங்க…

By Meena on செப்டம்பர் 27, 2024

Spread the love

சித்தர்கள் என்பவர்கள் அடைய வேண்டியதை அடைய பெற்றவர்கள் என்பது பொருள். அதாவது இறைநிலையை அடைந்தவர்கள். சாதாரண மனித சக்திக்கு அதீதமான அஷ்ட சித்திகளை பெற்றவர்கள் தான் சித்தர்கள். தவத்தின் மூலமாக இறைவனை அடைந்தவர்கள்.

   

அனிமா, லஹிமா, மஹிமா, கரீமா, பிரகாமியம், பிராப்தி, ஈசித்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமா சித்திகளை உள்ளடக்கி உடலை லேசாக்குவது, பறப்பது பிறர் கண்களுக்கு தெரியாமல் மறைத்தல், பெரிய பொருளை சிறிதாக்குவது, தனவயமாக்குவது, நினைத்த உருவத்தை எடுத்தல், விரும்பியதை அடைதல் ஆகியவற்றிற்கு சித்தி அடைதல் என்பது பொருள். இதை சித்தர்களால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இந்த ஆற்றலை பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஒரு சித்தர் சித்தி நிலையை அடைவதற்கு 12 ஆண்டுகள் ஆகுமாம்.

   

அப்படிப்பட்ட சித்தர்களை நாம் வழிபடுவதன் மூலம் இறைவனை எளிதாக அடையலாம் என்பது ஐதீகம். உலகில் லட்சக்கணக்கான சித்தர்கள் இருக்கிறார்கள். சித்தர்கள் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது திருவண்ணாமலை, பழனி, சதுரகிரி தான். இது மட்டுமில்லாமல் ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் ஆலயங்கள் பல இடங்களில் இருக்கின்றன. பொதுவாக சித்தர்களை வழிபாடு செய்ய விரும்புபவர்கள் பௌர்ணமி அமாவாசை நாட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பௌர்ணமி அமாவாசை நாட்களில் சித்தர்களை வழிபடும்போது அவர்கள் வேண்டி சென்ற நோக்கம் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த தினங்கள் முழுமையான தினங்கள் ஆகும். சித்தரை தரிசிக்க விரும்புவர்கள் சித்தர் குடியிருக்கும் கோவில்கள் அல்லது ஜீவசமாதிக்கு சென்று அவர்களுக்கு எதிரே அவள் பார்வைப்படும் படி அமர்ந்து தியானம் செய்யலாம்.

இது மட்டுமல்லாமல் சித்தர் காப்பு, சித்தர் மந்திரம் ஆகியவற்றை பாடி வணங்க வேண்டும். சித்தரை மனதில் நினைத்து ஒருமித்து தியானம் செய்ய வேண்டும். போகர், அகத்தியர் யாராக ஆனாலும் சரி நீங்கள் விருப்பப்பட்ட சித்திரை மனதில் நினைத்து அவர்களது மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை தொடர்ந்து 48 நாட்கள் கூறவேண்டும்.

சைவம் சாப்பிடுவது போதை வஸ்து பயன்படுத்துவது காம சிந்தனை எதுவும் இல்லாமல் ஒரு மனதோடு தியானம் செய்யும் போது 48 நாட்களுக்குள் அந்த சித்தர்கள் உங்களுக்கு தரிசனம் தருவார்கள். சித்தரின் அருள் கிடைத்து விட்டால் இறை பலன் விரைவில் கிடைக்கும். மெய்ஞானம் மற்றும் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.