எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம் ஜி ஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி அதன்வழி நடந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்ளில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதிக் கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் எம் ஜி ஆர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் யாருக்காவது கஷ்டம் என்று தெரிந்தாலே உதவி செய்வார். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
எம்ஜிஆர் நடித்த இன்று நேற்று நாளை திரைப்படத்தை நடிகர் அசோகன் தயாரித்தார். ஒரு கட்டத்தில் அந்த படத்திற்கு அவரால் செலவு பண்ண முடியவில்லை. படம் வெளியானாலும் கூட பலருக்கு சம்பள பாக்கி வைத்திருந்தார். இதை அறிந்த எம்ஜிஆர் உடனே அசோகனை கூப்பிட்டு பணத்தை கொடுத்து சம்பள பாக்கி இருப்பவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று சொல்லி கொடுத்தார்.
பணத்தை வாங்கிய உடனே அசோகன் இரவோடு இரவாக யாருக்கெல்லாம் பாக்கி இருக்கிறதோ அவர்களெல்லாம் தேடி சென்று கொடுத்திருக்கிறார். அதில் ஒரு ஊழியருக்கு வீட்டிற்கு சென்று இரவு இரண்டு மணிக்கு கதவை தட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அந்த ஊழியர் பணத்தை காலையில் கொடுக்கலாமே ஐயா என்று கேட்கும் போது இல்லை தலைவர் எம்ஜிஆர் பணத்தை கொடுக்க சொல்லிவிட்டார். அதை நான் உடனே செய்ய வேண்டும் என் கையில் வைத்திருந்தால் செலவாகிவிடும் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் பேச்சுக்கு மரியாதை இருந்திருக்கிறது. எம்ஜிஆரின் உதவும் குணம் இதிலிருந்து தெரிகிறது.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின்…
மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…