பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்த்துப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் எதற்காக, அதில் என்ன தொழில் முதலீடு வரப்போகிறது என்று யாருக்கும் புரியவில்லை. இந்த அதிகாரப்பூர்வ பயணத்தில் தொழில்துறை அமைச்சரையோ அல்லது துறை சார்ந்த அரசு அதிகாரிகளையோ முறைப்படி அழைத்துச் செல்லாமல், தனக்கு வேண்டிய நெருங்கிய நபர்களை மட்டுமே முதலமைச்சர் அழைத்துச் சென்றுள்ளார்” எனக் குற்றம் சாட்டினார். முதலமைச்சரின் இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து அரசின் நிதி நிலைமை குறித்துப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ₹40,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீனவர் பிரச்சனைகள் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற அத்தியாவசிய மக்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது போன்ற தேவையற்ற செலவுகளுக்கே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வழங்கிய எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது வந்துள்ள இடைத்தேர்தல் துரோகத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், அரசின் இத்தகைய செயல்பாடுகளால் மக்கள் பெரும் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களுக்குப் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…