நடிகர் கவின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் பிளடி பெக்கர் படத்தின் மூலமாக படுதோல்வியை சந்தித்தார். ஆனால் அதன் பிறகு தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினார். இப்போது அவர் நடித்திருக்கும் படம் கிஸ். இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது கவினை பார்த்து சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். இவர் கடைசியாக நடித்த போர்த்தொழில் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுவரை 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த இவர் கமலின் தக் லைப் படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றாலர்.
இப்போது தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்காகி 2 கோடி கேட்டு வருகிறாராம். தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் நலன் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் அசோக்செல்வன் கேட்கும் பணத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம். ஆனால் நடிகர்களின் சம்பளம் வாங்கும் அளவிற்கு படம் வசூல் செய்யுமா என்பது படம் வெளியானால்தான் தெரியும். ஆனால் இவர் நடித்த போர்தொழில் படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
