கணவன் வாங்கிய கடனுக்காக… இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்த சித்திரவதை செய்த கும்பல்.. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பன், ஶ்ரீஷா தம்பதியினர் ஒரு மகனுடன் வசித்து வருகின்றனர். இதனிடையே திம்மராயப்பன் அந்த பகுதியை சேர்ந்த முனி கண்ணப்பா என்ற நபரிடம் வட்டிக்கு 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலால் திம்மராயப்பன் குடும்பத்தோடு அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக ஸ்ரீஷா நாராயணபுரம் கிராமத்திற்கு வந்த நிலையில் தகவல் அறிந்து தனது கூட்டாளிகளுடன் வந்த முனி கண்ணப்பன் ஸ்ரீஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன் கணவன் வாங்கிய 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டியுடன் உடனடியாக தரும்படி மிரட்டிய நிலையில் ஒரு கட்டத்தில் அங்கிருந்த மரத்தில் ஸ்ரீஷாவை கட்டி வைத்து துன்புறுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முனி கண்ணப்பா மற்றும் கூட்டாளிகளை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.