நடிகை காவ்யா மாதவனின் வீட்டில் ஏற்பட்ட திடீர் இழப்பு… இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்…!!

By Soundarya on ஆனி 17, 2025

Spread the love

என் மன வானில், காசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை காவ்யா மாதவனின் தந்தை பி.மாதவன் 75 வயதில் காலமானார். கேரளாவை சேர்ந்த மாதவன், சுப்ரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவர் சென்னையில் மரணம் அடைந்ததாகவும், கொச்சியில் இறுதிசடங்கு நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். காவ்யா மாதவன் சமீப வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், மலையாள சினிமாவில் காவ்யா நன்கு அறியப்பட்ட பெயராகவே இருக்கிறார்.

   

அவரது தந்தையின் மறைவு இவருக்கு  ஒரு தனிப்பட்ட இழப்பாகும். காவ்யா மாதவன், நடிகர் திலீப்பின் மனைவி ஆவார். நடிகை காவியா ‘கமலின் பூக்களம் வரவாய்’ என்ற  மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது  திரை பயணத்தை தொடங்கினார்.மேலும்  மம்முட்டி, மோகன் லால் ,போன்ற  பிரபலங்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழில் என் மன வாழ்வில், சாது மிரண்டா போன்ற  படங்களில் நடித்துள்ளார .