Categories: சினிமா

சினிமால இது ரொம்ப முக்கியம்.. எங்க அப்பா எனக்காக பண்ண ஒரே நல்ல விஷயம்.. மனம் திறந்த அருண் விஜய்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்க்கு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க சுமார் 20 வருடங்கள் ஆனது. இந்த 20 வருடங்களும் தன் விடாமுயற்சியை கைவிடாமல் அவர் தொடர்ந்து போராடி வந்தார். அந்தப் போராட்டத்திற்காக பயனை தான் தற்போது அருண் விஜய் அனுபவித்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் அவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து குற்றம் 23, தடம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது தனுசுடன் இணைந்து இட்லி கடை மற்றும் ரெட்டை தல போன்ற பல படங்களில் நடித்து வரும் அருண் விஜயின் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் சினிமாவில் நடிக்கும் போது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக் கொண்டேன்.

சினிமாவை பொறுத்த வரையில் பொறுமை என்பது மிகவும் முக்கியம். நம்மை அல்லது நாம் நடிக்கும் படத்தை யாராவது குறை சொன்னால் அதில் இருக்கும் குறைகளை நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு இடத்திலும் பொறுமையை இழந்து விடக்கூடாது. ஒரு நடிகனாக தனக்கும் பல சவாலான கேரக்டர்கள் தேவைப்படுகிறது. நாம் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அந்த அறிமுகம் மட்டுமே சினிமா பின்னணியாக இருக்கும். அதன் பிறகு நம்முடைய உழைப்பு இருந்தால் மட்டுமே ஜெயித்துக் காட்ட முடியும்.

என் தந்தை விஜயகுமார் நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் எந்த ஒரு உதவியும் எனக்கு செய்யவில்லை. அவர் செய்த நல்ல விஷயம் என்னவென்றால் எனக்கு வரும் கதைகளை என்னையே தேர்வு செய்து கொள்ள சொன்னார். உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு உன் இஷ்டத்துக்கு எல்லாமே பண்ணிக்கோ என்று எல்லாமே என் விருப்பப்படி விட்டுட்டாரு. அப்போதிலிருந்து எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா நான் கத்துக்கிட்டேன். என்னுடைய உண்மையான பெயர் அருண் தான். சினிமாவுக்கு வரும்போது அருண் விஜய் என்று தன் அப்பா பெயரையும் சேர்த்துக்கொண்டு மாற்றி விட்டேன் என அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

4 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago