ரெட்ட தல படத்தின் சில காட்சிகளை பார்த்த நடிகர் தனுஷ் சொன்னது என்ன? – படத்தின் நாயகன் அருண்விஜய் சொன்ன சீக்ரெட்!

By Elango on மார்கழி 17, 2025

Spread the love

நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல படம் வருகிற 25ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் அருண் விஜய் பேசியதாவது, வணங்கான் படத்துக்கு பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அப்போதுதான் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன், ரெட்ட தல படத்தின் கதையை சொன்னார். எனக்கு கேட்டவுடனே கதை ரொம்பவும் பிடித்து விட்டது. இது ஒரு தியேட்டரிக்கல் படமாக ரசிகர்களுக்கு இருக்கும்.

இந்த படத்தில் வரும் கண்ணம்மா கண்ணம்மா என்ற பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். இட்லி கடை படத்தில் அவருடன் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, தனுஷிடம் இந்த படத்தின் சில காட்சிகளை காண்பித்தேன். அவர் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இந்த படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது. எல்லோருக்கும் ரெட்ட தல படம் நிச்சயம் பிடித்தமான படமாக இருக்கும் என்று நடிகர் அருண் விஜய் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.