நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஜனநாயகன் படத்தை டைரக்டர் எச். வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே மமீதா பைஜூ பிரியாமணி பாபி தியோல் பிரகாஷ்ராஜ் கௌதம் மேனன் நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார். மேலும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நடைபெற உள்ளது.
ஜனநாயகன் படத்தில் இருந்து ஏற்கனவே தளபதி கச்சேரி என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்போது 2வது பாடல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை 18ம் தேதி 2வது பாடலை வெளியிட உள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படத்திலிருந்து நாளை 2வது பாடல் வெளியாக இருப்பது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
