கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் யோகி பாபு எஸ் ஜே சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் பாலய்யா கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்ட தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தையும் வருகிற 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட படக் குழுவும் படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் திட்டமிட்டு இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் வெளியானால் ஜெயிலர் படத்தை போலவே ஜெயிலர் 2 படமும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்ற சென்டிமென்டுதான் இதற்கு காரணமாகும்.
