சினிமா பக்கமே தலைகாட்டாத அர்ஜுனின் இளையமகள்.. இப்படி ஒரு தொழில் செய்கிறாரா..? வெளியான தகவல்..

By Mahalakshmi

Published on:

தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் தனது சண்டை காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

   
நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள் இருக்கிறார்கள். இதில் நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகையாக பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைபடங்களில் கலக்கி வருகிறார்.

அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா சினிமா பக்கமே வராமல் சைலன்ட்டாக ஒதுங்கி தொழிலதிபராக மாறினார். அவர் பழத்தோலை வைத்து வித விதமாக ஹேண்ட்பேக் செய்ய முடியும் என்பதை கண்டுகொண்டு  அஞ்சனா அந்த பிசினஸை சிறப்பாக நடத்தி வருகிறார்.

ஆக்‌ஷன் கிங்கின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் சினிமா ஹீரோயினாக மாறி இருக்கலாம்.அந்த திறமையும் அழகும் அவரிடம் இருந்தது. இருப்பினும் ஹீரோயின்  ஆகாமல் நன்கு படித்து தனக்கான தொழிலை தேடிக் கண்டுபிடித்து பழங்களை வைத்து ஹேண்ட்பேக் செய்யும் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்.
author avatar
Mahalakshmi