ஆளும், மூஞ்சியும் பாரு.. ராஜ்கிரணை அசிங்கப்படுத்திய இளையராஜா.. நினைத்துக்கூட பாக்கமுடியாத அளவுக்கு சம்பவம் செய்த ராஜ்கிரண்..

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். என் ராசாவின் மனசிலே படத்தில், மாயாண்டி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். முரட்டுத்தனமான அவருக்குள், மீனா கொண்டிருக்கும் காதல், மயிலிறகால் வருடியதை போன்ற மென்மையான உணர்வாக அவருக்கும் வெளிப்படும். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளரும் ராஜ்கிரண்தான். ஆனால் இளையராஜா இசை வேண்டும் என்று கேட்டுச் சென்றவரை அவரை இளையராஜா முதலில் ஏற்றுகொள்ளவில்லை. அவரை சந்திக்கவே தவிர்த்தார்.

   

நீ ஒரு தடவை சொன்னால் கேட்க மாட்டியா, நீ எல்லாம் நடிக்க வந்துட்டே, கண்ணாடியில் உன் முகத்தை பார்த்தியா, நீ ஒரு ஹீரோவா, ஆளும் மூஞ்சியும் என திட்டி அனுப்பியிருக்கிறார். நான் படம் எடுத்துட்டு வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கணும் என ராஜ்கிரண் சொல்ல, உன் படத்தை எல்லாம் பார்க்கறதுக்கு எனக்கு நேரமில்லை, எனக்கு வேற வேலையில்லையா என்று திட்டியிருக்கிறார்.

அப்போது இளையராஜாவுடன் இருந்த வாலி, அப்படி என்னதான் படம் பார்ப்போம் என, இளையராஜாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று, இருவரும் படத்தை பார்க்கின்றனர். படம் பார்த்த பிறகு, இளையராஜா எதுவுமே சொன்னதில்லை. காலையில் 7 மணிக்கு என்னை பார்க்க வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

ராஜ்கிரண் இரவு முழுவதும் தூக்கமின்றி தவிக்கிறார். காலையில் இளையராஜா என்ன சொல்லப் போகிறார் என்ற குழப்பத்தில், இருக்கிறார். மறுபடி திட்டுவாரோ என பயப்படுகிறார். மறுநாள் காலை இளையராஜாவை பார்க்க சென்ற போது, இளையராஜா பூஜை அறையில் இருக்கிறார். நல்ல சகுனம் என்று ராஜ்கிரண் நினைக்கிறார். அப்போது இந்த படத்துக்கு என்ன செலவாச்சு, என்று கேட்கிறார். அப்போது ரூ. 25 லட்சம் வரை இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கிரண் சொல்கிறார்.

உடனே ரூ. 25 லட்சத்துக்கான செக்கை தந்த இளையராஜா மீதி படத்தை முடிச்சு கொடுத்துடு, மீதி 75 லட்சம் ரூபாய் தந்துடறேன், இந்த படத்தை எனக்கே கொடுத்துரு. நான் பாவலர் கிரியேசன்ஸ் என்ற பெயரில் இந்த படத்தை நானே ரிலீஸ் பண்ணிக்கிறேன், என்று கூறியிருக்கிறார். ராஜ்கிரணை கண்டபடி திட்டிய இளையராஜா, அவரது என் ராசாவின் மனசிலே படத்தை பார்த்து அசந்து போய், அந்த படத்தை அவரே ராஜ்கிரணிடமிருந்து பாவலர் கிரியேசன்ஸ் மூலம் வெளியிட்டு இருக்கிறார். படம் பிளாக் பஸ்டர் மூவியாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

author avatar
Sumathi