பொன்னியின் செல்வன் படத்தை, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை காப்பியடித்து எடுத்தது போல், பல ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் கருணாநிதி வாழ்க்கையை காப்பியடித்து எடுத்த படம்தான் இருவர். இதில் எம்ஜிஆர் கேரக்டரில் மோகன்லாலும், கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ் ராஜூம் நடித்திருப்பார். உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே என்ற வசனத்தை, படுக்கையில் தன் காதலியோடு இருந்து விட்டு, கருணாநிதி பேசுவது போல பிரகாஷ் ராஜ் பேசி நடித்திருப்பார்.
அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த காலகட்டம் என்பதால், இந்த படம் பயங்கரமான விமர்சனத்தை சந்தித்தது. இதற்காக மணிரத்னத்தை அழைத்து நேரில் விசாரிக்கப்பட்டது. இப்படி ஒரு கதையை எடுப்பதற்கு பதிலாக, என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார் மணிரத்னம். ஆனாலும், அந்த படம் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு பிடித்தமான கதையாக தான் அமைந்திருந்தது.
உயர்ந்த லட்சியங்களை கொண்ட இருவர், தங்களது தனிமனித பலவீனத்தால் எப்படி திசைமாறி போகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் மணிரத்னம். என்றாலும் எம்ஜிஆர் கருணாநிதி என்ற இருபெரும் அரசியல் ஆளுமைகளை, அவர்களது அந்தரங்க பலவீனங்களை வெட்ட வெளிச்சமாக்கிய இந்த படத்தை பார்த்து கருணாநிதி கோபப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
அதே வேளையில் இந்த படம் வெளியான போது எம்ஜிஆர் இருந்திருந்தால், மணிரத்னம் இயக்குநராக மீண்டும் தொடர்ந்திருப்பாரா என்பதே கேள்விதான் என்று அதிமுகவினர் தரப்பில் அப்போதே பேசப்பட்டது. இப்போதும் அது பேசுபொருளாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.