Categories: சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் ரிமாண்ட் செய்த நீதிமன்றம்.. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்..!

Spread the love

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் 294 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாளில் எந்த ஒரு திரைப்படமும் இந்த வசூலை பார்த்தது கிடையாது. தற்போது படம் 1000 கோடி வசூலை தண்டி விட்டது.

இந்த படத்தின் பிரிமியர் ஷோ டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஷோவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திருந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அல்லு அர்ஜுன் 25 லட்சம் பணத்தையும் வழங்கினார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஹை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு என்ற விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நம்பள்ளி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

மனைவியை ஏமாற்றினால் ஆப்பு!… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்… வெளியானது அதிரடி சட்டம்…!!

அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…

1 minute ago

அட கொடுமையே… கண் சிமிட்டும் நேரத்துல 70 கிராம் மாலையை காணோம்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்… நகைக் கடையையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்…!

ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…

5 minutes ago

ஐயோ ஐயோ… யாராலயும் என்னை தடுக்க முடியாதுடா… எனக்கே ஸ்கெட்சா?…ஜேசிபியால் போலீஸ் தடுப்புகளை… நொறுக்கி எறிந்த டிரைவர்…நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின்…

17 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் மனுஷங்களா… அவன் செத்தா செத்துட்டு போறான்… தூக்கி எறிடா… நடுரோட்டில் வாலிபரை அடித்து நொறுக்கி… சாக்கடையில் வீசிய போதை ஆசாமிகள்… அலற வைக்கும் பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியில், மதுபானக் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கழிவுநீர்…

26 minutes ago

அடேய்… யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற?… மேலதிகாரியை கெட்ட வார்த்தையால் வெளுத்து… வாங்கிய செய்தி வாசிப்பாளர்… நடுங்க வைக்கும் நியூஸ்ரூம் சண்டை… ஆங்கர் அதிரடி டிஸ்மிஸ்…!

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் டேவ் மக்மாஃஹான், செய்தி அறையில் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான…

39 minutes ago

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி…. குதிரையை நொடி பொழுதில் தூக்கிச்சென்ற புலி… நெஞ்சை நடுங்கவைக்கும் வைரல் வீடியோ….!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராமநகரின் கர்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17 திங்கள்கிழமை பட்டப்பகலில் புலி ஒன்று குடியிருப்பு…

56 minutes ago