51 வயதில் பட்டப்படிப்பை முடித்து பட்டம் வாங்கிய பிரபல நடிகரின் மனைவி… குவியும் வாழ்த்துக்கள்…

By Begam

Updated on:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் காக்கா அரக்கனாக நடித்து மிரட்டி இருப்பார். பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் உள்ளிட்ட மூன்று கான் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து லீடு ரோலில் அசத்தி வரும் அக்‌ஷய் குமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

   

இவர் நடிப்பிற்காக தமது உடலை தேவையான அளவிற்கு மாற்றுவது என திரை துறைக்காக முழு ஈடுபாடுடன் நடித்து வருகின்றார். இதனால் இவருக்கு அளவு கடந்த ரசிகர்கள் இருந்து வருகின்றனர். எவ்வளவு உயர்ந்தாலும் எளிமையான குணம் கொண்டவராகவே திகழ்கின்றார் . இவர் நடிப்பில் வெளிவந்த ‘அத்ராங்கி ரே’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வரை பல திரைப்படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வருகிறார். இவர் 2001 ஆம் ஆண்டு ட்வின்கிள் கன்னா என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்பொழுது இவரின் மனைவி ட்வின்கிள் கன்னா  தனது பட்டபடிப்பை முடித்து பட்டம் வாங்கியுள்ளார்.

இந்த வயதில் படிப்பின் மீது ஆர்வம் கொண்டு  அக்ஷய் குமாரின் மனைவி பட்டம் வாங்கியது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தன் மனைவியை பாராட்டி நடிகர் அக்ஷய் குமார் தனது  இணையத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

author avatar