சந்தானம் அவர்கள் முதல்முறையாக விஜய் டிவி லொள்ளு சபா மூலம் அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக தான் திரை உலகிள் அறிமுகமானார், அதில் நிறைய படங்கள் வெற்றி படமாக மாறியது, ஹீரோவாக மாறிய பிறகு சந்தானம் ஒரு சில படம் ஓடி வெற்றி கண்டபின், இவர் காமெடியன் ரோலை விட்டுவிட்டு முழுமையாக ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்தார் அதில் எந்த படமும் ஓடவில்லை ஆனால் இப்ப சமீபகாலமாக டிடி ரிட்டன்ஸ் போல் சில படங்களில் அவர் கம்ப கொடுக்க ஆரம்பித்துள்ளார். அந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள வடக்குப்பட்டி ராமசாமியும் நல்ல மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி கலவரமாக இருக்கும் இப்படம் குடும்ப ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்துள்ளது.
ஏற்கனவே ட்ரைலரின் மூலம் ஒரு சில சர்ச்சைகள் படத்திற்கு எதிராக கிளம்பியது. ஆனால் அதுவே ப்ரமோஷன் ஆக மாறி படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இப்படம் மொத்தத்தில் 600 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது, இப்படத்திற்கு முதல் நாளிலேயே தியேட்டர்களில் நல்ல அமோகமான கூட்டங்கள் வந்து சேர்ந்தது.
அதை தொடர்ந்து விடுமுறை நாட்கள் ஆன சனி, ஞாயிறு அன்று வடக்குப்பட்டி ராமசாமி படம் நல்ல கலெக்ஷனை பெற்று இருக்கிறது. அந்த வகையில் முதல் நாளில் 80 லட்சம் வரை வசூலித்த இப்படம் இரண்டாவது நாளில் 1.15 கோடி வரை லாபம் பார்த்திருக்கிறது.அடுத்ததாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தை பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. அதன்படி இரண்டு நாட்களை விட மூன்றாவது நாளில் இப்படம் அதிகபட்சமாக 1.35 கோடி வசூலித்திருக்கிறது.
ஆக மொத்தம் மூன்று நாட்களில் மட்டுமே இப்படம் 3.30 கோடி கலெக்ஷனை பார்த்து இருக்கிறது. இந்த வசூல் இனிவரும் நாட்களிலும் இதைவிட அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்குப்பட்டி ராமசாமி பட குழுவினரும் சந்தனமும் மிகுந்த குஷியில் உள்ளார்கள்.