CINEMA
நாம் மனிதர்களை விட இரண்டு மடங்கு… அவரை நினைத்து ஜோதிகா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்..
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அதிலும் சூர்யா – ஜோதிகா காம்பினேஷன் என்றாலே செம்ம மாஸ் தான். ரீல் ஜோடியாக திரையில் ஜொலித்தவர்கள் தற்போது ரியல் ஜோடியாக அசத்தி வருகிறார்கள்.
தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்பொழுது அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் இறுதியாக சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி லாலுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .தற்பொழுது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பையில் புதிய வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஜோதிகா. தற்பொழுது இவர் தனது செல்ல நாய்க்குட்டியான kobe விற்கு ஒரு வருடம் நிறைவடைந்ததாக கூடி பிறந்தநாள் வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் kobe விற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram