நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கூட டப்பிங் பணிகளை அஜித் முடிந்த நிலையில் தற்போது பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படபிடிப்பு முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்து விட்டதாக படக்குழு அறிவித்தனர். இந்த படத்தில் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ சவதீகா ‘ லிரிக் வீடியோ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.