தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பிற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதிலும் குறிப்பாக இவர் பலம்பெறும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதோடு இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ரகு தாத்தா என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடித்து வரும் நிலையில் ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை அட்லி தயாரித்திருந்த நிலையில் வரும் தவான் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம்.
இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ரிலீசானது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீத் தன்னுடைய முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்தித்துள்ளார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு நார்த் இந்தியன் படமே ராசியில்லை என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
காரணம் கீர்த்தி சுரேஷ் முதலில் மைதான் என்ற பாலிவுட் படத்தில் நடித்த தமிழ் ஆகிய இருந்த நிலையில் அந்த படத்தின் போது இவர் உடல் எடையை அதிகம் குறைத்ததால் அந்த பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதன் பிறகு தான் அட்லி தயாரித்த பேபி ஜான் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் படங்கள் ராசி இல்லை என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.