Categories: சினிமா

யாருக்கும் பணியாதே அஜித்தே காலில் வணங்கி முத்தமிட்ட அயர்டன் சென்னா யார் தெரியுமா?.. பலரும் அறியாத ஆச்சரிய தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

 

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கக்கூடிய அஜித்குமாரின் செயலை பாராட்டும் விதமாக  சசமீபத்தில் குடியரசு தலைவர் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்திருந்தார். வாழ்ந்தால் அஜித்தை போலத்தான் வாழ வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட அஜித்குமாருக்கு ரோல் மாடலாக ஒருத்தர் இருப்பது ஆச்சரியம்தான். நேற்று முன்தினம் அஜித் அயர்டன் சென்னா என்பவரின் சிலைக்கு சென்று மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தின் வைரலானது.

இதனால் அவருடைய ரசிகர்கள் அவர் யாரென்று இணையத்தில் தேட தொடங்கியுள்ளன. மோட்டார் சாகச உலகத்தில் தனி ஒரு அடையாளம் பதித்த பிரேசிலியன் ஃபார்முலா 1 ஓட்டப்பந்தய வீரர் தான் இந்த அயர்டன் சென்னா. தன்னுடைய திறமையால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். கடந்த 1960 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி பிரேசிலின் சாவோ பாவ்லோவில் பிறந்தவர். சிறுவயதிலேயே கார்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கார்டின் மூலமாகவே தனது ரேசிங் வாழ்க்கையையும் தொடங்கினார். தன்னுடைய சிறுவயதிலேயே ரேசிங் துறையில் வந்தவர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு ஃபார்முலா 1 பந்தயத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பல அணிகளுக்காக பந்தயத்தில் பங்கேற்ற இவர் Mclaren அணியுடன் கூட்டினைந்து 1988, 1990 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் மூன்று உலக சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். இவருடைய பந்தய நுட்பம், நேர்த்தி மற்றும் எதிரியை மதிக்கும் மனப்பான்மை ரசிகர்கள் மத்தியில் இவரை தெய்வீக அந்தஸ்திற்கு உயர்த்தியது. இவர் பங்கேற்ற பல சிக்கலான போட்டிகளில் சாதித்த வெற்றிகள் வரலாற்றில் நினைவாக நிறைந்துள்ளன.

1994ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளான அன்று மே 1ஆம் தேதி, இத்தாலியின் இமோலா பந்தய திடலில் நடைபெற்ற San Marino Grand Prix போட்டியின் போது சென்னா ஒரு மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சென்னாவின் மரணம் கார் ரேஸ் போட்டிகளில் பல பாதுகாப்பு மாற்றங்களை ஏற்படுத்தியது. பிரேசிலில் தேசிய துக்கமாக அறிவிக்கப்பட்டது. அவரின் நினைவாக Instituto Ayrton Senna என்ற தொண்டு நிறுவனம் அமைக்கப்பட்டு ஏழை குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வளர்ச்சி பணிகளை இன்று வரை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

15 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

19 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

24 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

41 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

43 minutes ago