Categories: சினிமா

இப்படி கூடவா பண்ணுவாங்க.. ஏ.ஆர் முருகதாசை அழ வைத்த கேப்டன் விஜயகாந்த்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு  உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இப்படியான நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஏ ஆர் முருகதாஸ் விஜயகாந்த் பற்றி சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு வந்து பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். அந்த காலத்தில் எல்லாம் உதவி இயக்குனர்களுக்கு அவ்வளவு மரியாதை இருக்காது. இன்னும் சொல்லப்போனால் ஒரு தேநீர் கொடுக்க கூட யோசிப்பார்களாம்.

அப்போது கேப்டன் விஜயகாந்தின் கருப்பு நிலா திரைப்படத்தில் இயக்குனர் அரவிந்தராஜிடம் ஏ ஆர் முருகதாஸ் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் அவருக்கு ஆர்லிக்ஸ் கொடுத்துள்ளனர். நம் ஊரில் எல்லாம் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் தான் ஹார்லிக்ஸ் கொடுப்பார்கள். ஆனால் இங்கு முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஆர்லிக்ஸ் கொடுக்கிறார்கள் என்று யோசித்தபோது அங்கிருந்து அனைவருக்குமே ஆர்லிக்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் திரும்பிப் பார்த்த ஏ ஆர் முருகதாஸ் அடுப்பில் பெரிய பாத்திரத்தில் நிறைய பால் காய வைத்துக்கொண்டு ஆர்லிக்ஸ் கொட்டி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். கேப்டன் விஜயகாந்த் அங்கிருந்து அனைவருக்குமே ஹார்லிக்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியதால் இவ்வாறு செய்துள்ளனர். கேப்டன் பற்றி நிறைய பேர் சொல்லும் போதெல்லாம் ஆச்சரியப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் அதனை முதல் முறையாக நேரிலேயே பார்த்துள்ளார். இதனைக் கண்டு ஏ ஆர் முருகதாஸ் ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டதாக சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

6 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

14 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

2 மணத்தியாலங்கள் ago