டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாகத் துறை அதிகாரிகள் தமிழகத்தின் 12 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அதிலும் குறிப்பாக பராசக்தி மற்றும் இட்லி கடை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் தலைமறைவாகினார். டாஸ்மாக் முறைகேடு மூலமாக கிடைத்த பணத்தை வைத்து அவர் தயாரிப்பாளராக வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
தற்போது ஆகாஷ் பாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் தனுஷ் நடித்த இட்லி கடை மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி உள்ளிட்ட படங்கள் திறக்கி வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படங்கள் தொடர்பாக அமலாகத் துறை அதிகாரிகள் நடிகர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படியான நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கையால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி இருக்கும் பட்சத்தில் திடீர் தளபதிக்கு சிக்கல் வந்துள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வணங்கான் படத்தில் நடிக்காமல் தப்பினார் சூர்யா. அதில் அருண் விஜய் நடித்தார். படம் ஃப்ளாப். அடுத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையான பராசக்தியில் கமிட் ஆனார் சூர்யா. பிறகு.. இதில் நடித்தால் மத்திய பாஜக அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தனது பான் இண்டியா ஹீரோ கனவும் புட்டுக்கும் என்பதால், பராசக்தி வேண்டாம் என கழண்டு கொண்டார்., இப்படி ஒரு கான்ட்ரவர்சி கதையில் நடித்தால் தமிழ்நாட்டு மக்களை கவரலாம். இப்போதைக்கு நமக்கு பான் இண்டியா கனவும் இல்லை.
ஆகவே வடக்கே சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை. அது படத்தின் ப்ரமோசனுக்கு உதவும். படத்தை தயாரிப்பது dawn pictures. அதை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயண்ட். ஆகவே சிக்கல் இல்லை. அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால் மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி. ஆனால் தற்போதைய ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால்.. படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால் மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி. ஆனால் தற்போதைய ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால்.. படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்.” என கூறியுள்ளனர்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…